பாலமுனை மெரூன்ஸ் கழகம் சம்பியன்

பாலமுனை 2015 ஓ.எல் டைனமிக் போய்ஸ் நடாத்திய கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் பாலமுனை மெரூன்ஸ் விளையாட்டுக் கழகம் 2019 டைனமிக் கிண்ணத்தைச் சுவீகரித்துச் சம்பியனாகியது.

பாலமுனை 2015 ஓ.எல் டைனமிக் போய்ஸ் கழகத் தலைவர் ஏ.எல்.எம்.சீத் தலைமையில் பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் மாலை (01.09.2019) பாலமுனை மெரூன்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கும் பாலமுனை அல்-அறபா விளையாட்டுக் கழகத்திற்குமிடையில் இச்சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி நடைபெற்றது.

8 ஓவர் 11 பேர் என்ற அடிப்படையில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய மெரூன்ஸ் கழக அணியினர் குறிப்பிட்ட ஓவர் நிறைவில் 7 விக்கட் இழப்பிற்கு 74 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாலமுனை அல்- – அறபா அணியினர் குறிப்பிட்ட ஓவர் நிறைவில் 7 விக்கட்களை இழந்து 52 ஓட்டங்களைப் பெற்று 22 ஓட்டத்தினால் தோல்வியடைந்து இரண்டாமிடத்தினைப் பெற்றுக் கொண்டனர்.

இறுதிப்போட்டியில் மெரூன்ஸ் அணியின் வீரர் சிராஜுதீன் 4 பந்து களில் 4 விக்கட்களைப் பெற்று ஆட்ட நாயகனாகவும், தொடரின் சிறந்த வீரராக 24 ஓட்டங்களையும் 8 விக்கட்களையும் கைப்பற்றிய பாலமுனை றைஸ்டார் கழக வீரர் ஆசீகும் தெரிவு செய்யப்பட்டு அதிதிகளினால் கிண்ணங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இறுதிப்போட்டியில் வெற்றி பெற்றுச் சம்பியனான மெரூன்ஸ் கழக அணித்தலைவரிடம் வெற்றிக்கிண்ணத்துடன் 12ஆயிரம் ரூபாப் பணப்பரிசினையும் நிகழ்வின் பிரதம அதிதி பொது நிர்வாகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் ஒருங்கிணைப்புப் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் வழங்கி வைத்தார்.

இரண்டாமிடம் பெற்ற அல்- – அறபா கழக அணித்தலைவரிடம் கிண்ணத்துடன் 8ஆயிரம் பணப்பரிசுத் தொகையினையும் நிகழ்வின் கௌரவ அதிதி நுகர்வோர் அதிகார சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்சில் வழங்கி வைத்தார்.

இதன்போது இச்சுற்றுப்போட்டியில் மூன்றாமிடம் பெற்ற பாலமுனை அல் - ஈமானியா அரபுக் கல்லுாரியின் கழக அணித்தலைவரிடம் கிண்ணத்தினை அட்டாளைச்சேனைப் பிரதேச சபையின் உதவித்தவிசாளர் எஸ்.எம்.எம்.ஹனீபா வழங்கி வைத்தார். இந்நிகழ்வில் அட்டாளைச்சேனைப் பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.பீ.பதுர்த்தீன்,ஏ.எஸ்.எம்.உவைஸ்,பாலமுனை முஸ்லிம் காங்கிரஸின் அமைப்பாளர் ஏ.எல்.எம்.அலியார், அமைப்பின் உறுப்பினர்கள்,அங்கத்தவர்கள், இளைஞர்கள் கழக வீரர்கள் எனப் பலரும் இதில் கலந்து கொண்டனர்.

(ஒலுவில் கிழக்கு தினகரன்,பாலமுனை கிழக்கு தினகரன் நிருபர்கள்)

Tue, 09/03/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை