நீண்டநாள் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் குயிண்டன் டி கொக்

தென்னாபிரிக்க ரி-20 கிரிக்கெட் அணியின் தலைவர் குயிண்டன் டி கொக் கூறிய சர்ச்சையான கருத்துக்கு அவர் தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இங்கிலாந்தில் நடைபெற்று முடிந்த உலகக்கிண்ண தொடரில், தென்னாபிரிக்க அணி முதல் சுற்றுடனேயே வெளியேறியது.

இதன்பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, ஐ.பி.எல். தொடரில் சம்பியன் பட்டம் வென்றதே எனது வாழ்வில் மறக்க முடியாத தருணம் என குயிண்டன் டி கொக் கூறினார். இந்த விடயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அத்தோடு, அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான கார்கிஸோ ரபாடா, சோர்விழந்து காணப்பட்டதற்கும் ஐ.பி.எல். தொடரே முக்கிய காரணம் எனவும் அணியின் அப்போதைய தலைவர் டு பிளெஸிஸ் குற்றஞ்சாட்டினார்.

இந்த நிலையில், தற்போது இந்தியாவிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்கா அணி, மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரிலும், நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடவுள்ளது.

இதே தொடரின் இறுதி தொடரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடர் மீண்டும் 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ளது. இதற்கிடையில், முதலாவதாக நடைபெறும் ரி-20 தொடரிற்கு முன்னதாக ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றுது. இதன்போது, குயிண்டன் டி கொக்கிடம், ‘உலகக் கிண்ண தொடரை விட ஐ.பி.எல். தொடர் தான் உணர்ச்சி ரீதியிலான மிகப்பெரிய தொடர்’ எனக் கூறியது ஏன் என கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு குயிண்டன் டி கொக் பதிலளிக்கையில், “நான் என்ன சொல்ல வேண்டும்? நான் இதுவரை வெற்றி பெற்றதில் மிகப்பெரிய விடயம். நான் உலகக் கிண்ணத்தை இதுவரை வென்றது கிடையாது. ஆகவே, ஒருமுறை நான் உலகக் கிண்ணத்தை வென்றால், எனது கிரிக்கெட் வாழ்க்கையில் நான் செய்ததை விட, அது மிகப்பெரியதாக இருக்கும்.

நான் ஒன்றிரண்டு அணிகளுக்கான ஐ.பி.எல். தொடரில் விளையாடியுள்ளேன். அந்த அணிகள் பிளே-ஒப் சுற்றுக்கு முன்னேறியதில்லை. நான் மும்பை அணிக்காக விளையாடினேன். அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி சம்பியன் பட்டத்தை வென்றது.

ஆகவே எந்தவொரு கிரிக்கெட்டருக்கும் இது மிகப்பெரிய சாதனையாகத்தான் இருக்கும். தற்போது கிரிக்கெட் வீரர்கள் ஐ.பி.எல். இறுதிப் போட்டியில் விளையாட வேண்டும். உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் விளையாடும் அணியில் ஒரு வீரராக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.

தனிப்பட்ட முறையில் இது ஒவ்வொருவருக்கும் மாறுபட்டதாக இருக்கும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும். என்னுடைய கருத்து என்னுடையது. அவர்களுடைய கருத்து அவர்களுடையது. ஐ.பி.எல். கிண்ணத்தை வென்றது இதுவரை என்னுடைய மிகப்பெரிய சாதனை” என கூறினார்.

Thu, 09/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை