ஹொங்கொங் ஆர்ப்பாட்டத்தை தடுப்பதற்கு படைகள் குவிப்பு

ஹொங்கொங்கில் விமான நிலையங்களில் போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானதால் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஹொங்கொங்கில் குற்றஞ்சாட்டப்படுபவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி விசாரிக்கும் சட்டமூலத்தை ஹொங்கொங் தலைவர் கேரி லேம் ரத்து செய்த பின்னரும், ஜனநாயக உரிமைகளை வலியுறுத்தி அங்கு போராட்டங்கள் நடைபெறுகின்றன. போராட்டக்காரர்கள் வார இறுதி நாட்களில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில், கடந்த சனிக்கிழமை இரவு துங் சுங் பகுதி வீதிகளில்் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும், அப்புறப்படுத்த முயன்றதால் வன்முறை வெடித்தது.

இந்தநிலையில் நேற்று போராட்டக்காரர்கள் விமான நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து பொலிஸார் சர்வதேச விமான நிலையம் மற்றும் முக்கிய ரயில் நிலையங்களில் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பயணத்துக்கான டிக்கெட் வைத்திருப்போர் தவிர்த்து போராட்டத்தில் ஈடுபட வந்தவர்களை பொலிஸார் விமான நிலைய நுழைவாயில் பகுதியிலேயே தடுத்து நிறுத்தினர். மேலும் போராட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக, ரயில்வே சேவையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இடங்களுக்கு ரயில் சேவையும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

Mon, 09/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை