மத்திய கலாசார நிதியம்: மோசடி எதுவுமில்லை சிறைக்கு அனுப்பினாலும் செயற்பாடுகள் தொடரும்

என்னை சிறைக்கு அனுப்பினாலும் நடவடிக்கைகளை தொடர்வேன்

மத்திய கலாசார நிதிய நிதி ஒருபோதும் மோசடி செய்யப்படவில்லை.யாரோ வழங்கிய தவறான தகவலின் பிரகாரம் இந்த விவாதம் நடத்தப்படுகிறது. என்னை வெளிக்கடை சிறைக்கு அனுப்பினாலும் நான் முன்னெடுக்கும் நடவடிக்கைகளை தொடர்வேன் என கலாசார மற்றும் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

ஜெயிலானி (கூறகல)புனிதஸ்தலத்தை இன நல்லுறவு மற்றும் சகோதரத்துவம் பேணும்

அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் முறைப்பாட்டிற்கமைய பிரதமர் குழு அமைத்துள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்தியின் பிரகாரமே இந்த விவாதம் நடைபெறுகிறது. பிரதமர் அவ்வாறு குழு அமைத்துள்ளாரா என கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதலளித்த அமைச்சர், எந்த ஒரு குழுவும் பிரதமர் உருவாக்கவில்லை. கோப் குழுவிலோ கணக்குக் குழுவிலோ இது பற்றி ஆராயப்படவில்லை என்றார்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த பிமல் ரத்னாயக்க எம்.பி, இவ்வாறான குற்றச்சாட்டை அரசாங்க தரப்பில் இருந்து தான் முதலில் நிராகரித்திருக்க வேண்டும். 30 வருடத்திற்கு மேலாக மத்திய கலாசார நிதியம் தமக்குரிய பணியை அன்றி வேறு பணியே செய்துவந்துள்ளது. இந்த நிதி பயன்படுத்தியது குறித்து முழுமையான கணக்காய்வு மேற்கொள்ள வேண்டும். பிணைமுறி முக்கிய சந்தேக நபரே இந்த மத்திய கலாசார நிதிய முறைகேடுபற்றி கூறியிருந்தார் என்றார்.

ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்

Thu, 09/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை