நாட்டுடன் இணைந்த பகுதியை விட கடலரிப்பால் இழந்ததே அதிகம்

துறைமுக நகரம்

துறைமுக நகரினால் நாட்டுடன் இணைக்கப்படும் பிரதேசத்தை விட அதிக பிரதேசம் கடலரிப்பினால் அழிந்துள்ளதாக ஜே.வி.பி குற்றஞ்சாட்டியுள்ளது.நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க இதற்கான பொறுப்பை ராஜபக்‌ஷவினரா அல்லது ரணில் தரப்பா ஏற்கப் போகிறது எனவும் கேள்வி எழுப்பினார். 

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, 

துறைமுக நகர திட்டத்தினால் நீர்கொழும்பு,வெண்ணப்புவ போன்ற பிரதேசங்களில் பாரிய கடலரிப்பு ஏற்பட்டுள்ளது.துறைமுக நகரத்தினூடாக இணைத்துக் கொள்ளப்பட்ட நிலப்பரப்பை விட அதிக பிரசேதம் நாட்டின் வரைபடத்தில் இருந்து நீங்கியுள்ளதாக அருட்தந்தை சனத் இத்தமல் கொட கூறியுள்ளார்.துறைமுக நகரத்தை தாங்களே உருவாக்கியதாக ராஜபக்‌ஷ தரப்பு கூறுகிறது.தாங்கள் தான் வர்த்தமானியில் அறிவித்து அதனை சட்டபூர்வமாக நாட்டுடன் இணைத்ததாக பிரதமர் ரணில் தரப்பு உரிமை கோருகிறது.ஆனால் இந்தத் திட்டத்தினால் ஏற்பட்ட கடலறிப்பு சேதத்தை யார் பொறுப்பேற்கப் போகின்றனர்.

துறைமுக நகரத்திற்காக களனி பாலத்திலிருந்து நெடுஞ்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கடன் பெற்று இவ்வாறு நெடுஞ்சாலை அமைக்கப்படுகிறது.  இந்தத் திட்டத்தினால் சூழலுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் சுற்றாடல் அறிக்கை இன்றி முதலீடு செய்ய அனுமதி கோருகின்றனர்.  அமைச்சர்கள் எந்த ஆய்வும் செய்யாமல் தான் பொருளாதார ஒப்பந்தங்களில் ஒப்பந்தம் செய்கின்றனர்.

ஷம்ஸ் பாஹிம்,  மகேஸ்வரன் பிரசாத் 

Sat, 09/07/2019 - 10:16


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை