பிரான்ஸ் இரசாயன ஆலையில் தீ: நச்சுப்புகை வெளியேற்றம்

பிரான்ஸ் நாட்டில் உள்ள மிகப்பெரிய நச்சுத்தன்மை கொண்ட இரசாயன ஆலை தீப்பற்றி, விஷவாயு கலந்த நச்சு புகை வெளியேறி வருகிறது.

இதைத்தொடர்ந்து அங்குள்ள பாடசாலைகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது.

அந்நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள துறைமுக நகரமான ரூனில், லுௗப்ரிசால் என்ற நச்சுத்தன்மை கொண்ட இரசாயன உற்பத்தி ஆலை உள்ளது. இந்த ஆலையில் சேமித்துவைக்கும் அறை ஒன்றில் திடீரென தீப்பற்றி வெடித்து சிதறியது.

தீ அருகிலிருந்த இரசாயன பொருட்களுக்கும் பரவியதால், ஆலை முழுவதும் தற்போது தீப்பற்றி நச்சு வாயு கலந்த கரும்புகை வெளியேறி வருகிறது.

தகவல் அறிந்து சம்பவ இடம் விரைந்துள்ள 200க்கு மேற்பட்ட தீயணைப்பு துறையினர், தீயை அணைக்க போராடியதோடு அபாய ஒலி எழுப்பி ரூன் நகரை சுற்றியுள்ள 11 பகுதிகளை சேர்ந்த மக்கள், வீட்டை விட்டு வெளியே செல்லவேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் விஷவாயு கசிவால் உயிர் பலி ஏற்பட கூடும் என்பதால், முன்னெச்சரிக்கையாக சுற்றுப்புற பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலை தீவிபத்து சம்பவம் குறித்தும் அதிகாரிகள் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

Fri, 09/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை