“அமேசன் மழைக்காடு பிரேசிலுக்கே சொந்தம்”

ஐ.நாவில் பொல்சனாரோ உரை

பிரேசில் எல்லைக்கு உட்பட்ட அமேசன் மழைக்காடு தமது நாட்டின் இறைமை கொண்ட பகுதி என்று பிரேசில் ஜனாதிபதி ஜெயிர் பொல்சனாரோ ஐ.நாவில் தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் மற்றும் மரக்கடத்தல்காரர்கள் அமேசன் காட்டை அழிப்பது தொடர்பில் பொல்சனாரோ மற்றும் அவரது அரசாங்கம் பாராமுகமாக இருப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

எனினும் நியூயோர்க்கில் கடந்த செவ்வாய்க்கிழமை பொதுச் சபையில் உரையாற்றிய அவர், இதற்கு முரணாக கருத்து தெரிவித்தார்.

அமேசன் காட்டை மனித குலத்தின் பாரம்பரிய சொத்து என்று தவறாக விபரிக்கப்படுவதாக குறிப்பிட்ட அவர், அந்தக் காடு பூமியின் நுரையீரல் என்று கூறுவது தவறான கருத்தாகும் என்றார்.

அமேசன் மழைக்காடுகளின் பாதிக்கும் அதிகமானது பிரேசிலில் இருப்பதோடு அங்கு இந்த ஆண்டில் வழக்கத்துக்கு மாறாக காட்டுத் தீ பரவியதை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா மற்றும் ஏனைய நிறுவனங்கள் சுட்டிக்காட்டி இருந்தன.

“பரபரப்பான செய்தி தருவதற்காகப் பொய்யான செய்திகளைச் சர்வதேச ஊடகங்கள் தந்துவிட்டன. எங்களுக்கு உதவுவதற்குப் பதிலாக, ஊடகங்களின் இந்த புரட்டுகளை எடுத்துக் கொண்டு காலனித்துவ மனநிலையில் சில நாடுகள் நடந்து கொண்டன” என்று பொல்சனாரோ கூறினார்.

Thu, 09/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை