இந்தோனேசியாவில் சர்ச்சைக்குரிய சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

திருமணத்திற்கு முந்திய பாலுறவை தடை செய்ய முன்மொழியப்பட்டிருக்கும் புதிய குற்றவியல் சட்டம் ஒன்றுக்கு எதிராக இந்தோனேசிய பாராளுமன்றத்திற்கு வெளியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்கு பொலிஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை பயன்படுத்தியதோடு தண்ணீர் பீச்சடித்தனர்.

இந்த சட்டமூலத்திற்கு எதிராக நாட்டின் வேறு பல நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த சட்டமூலத்தில் பெரும்பாலான கருக்கலைப்புகளுக்கு தடை விதிக்கப்படுவதோடு ஜனாதிபதியை அவமதிப்பது சட்டவிரோதமாகும்.

இந்த சட்டமூலம் ஒத்திவைக்கப்பட்டபோதும் அது இன்னும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குறிப்பட்டுள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை இந்த சட்டமூலம் மீது வாக்கெடுப்பு நடத்தப்படவிருந்த நிலையில் அதனை ஜனாதிபதி ஜொகோ விடோடோ வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தார்.

இதற்கு எதிராக இந்தோனேசியா எங்கும் மாணவர்களை அதிகம் கொண்ட ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் பல நகர வீதிகளிலும் ஒன்று திரண்டனர். தலைநகர் ஜகர்த்தாவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மோதல் ஏற்பட்டது. சபாநாயகர்களை சந்திப்பதற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸார் மீது கற்களை வீசிய நிலையில் அவர்கள் மீது தண்ணீர் பீச்சியடிக்கப்பட்டதோடு கண்ணீர் புகைக்குண்டுகளும் விசப்பட்டன.

போராட்டக்காரர்களைத் தடுக்க ஜகார்த்தாவில் 5000 பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Thu, 09/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை