விமானக் கடத்தல் தொடர்பில் தவறாக கைதானவர் விடுதலை

1985 ஆம் ஆண்டு விமானம் ஒன்றை கடத்திய சந்தேகத்தில் கிரேக்கத்தில் கைது செய்யப்பட்ட லெபனான் நாட்டவர் விடுவிக்கப்பட்டுள்ளார். பெயர் குழப்பம் காரணமாக அவர் தவறுதலாக கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். முஹமது சலாஹ் என்ற பெயர்கொண்ட அந்த நபரின் கடவுச்சீட்டை சோதனை செய்தபோது அவர் ஜெர்மனியில் தேடப்படுபவர் என்று தெரிந்ததை அடுத்தே கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.

டி.டபுள்யூ.ஏ 847 விமானம் 1985ஆம் ஆண்டு ஏதென்ஸிலிருந்து கிளம்பிய சிறிது நேரத்தில் கடத்தப்பட்டது. இஸ்ரேலிய சிறையில் உள்ள முஸ்லிம் கைதிகளை விடுவிக்கக் கோரி விமானத்தில் இருந்த சிலர் கோரிக்கை வைத்தனர்.

விமானத்திலிருந்த பயணிகள் சிலரையும் தாக்கினர். இதில் அமெரிக்க கப்பற்படையைச் சேர்ந்த ஒருவர் இறந்தார். இந்த கடத்தலில் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரிலேயே 65 வயதான சலாஹ் கைது செய்யப்பட்டார். விசாரணையில் இவருக்கும் கடத்தலுக்கும் தொடர்பில்லை என்று தெரியவந்ததை அடுத்து அவர் விடுதலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய உண்மையான நபர் விமானக் கடத்தலின் இரண்டு ஆண்டுகளுக்கு பின் ஜெர்மனியில் கைது செய்யப்பட்டதாகவும் லெபனானில் கடத்தப்பட்ட இரு ஜெர்மனியருக்காக பின்னர் விடுவிக்கப்பட்டதாகவும் கிரேக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Thu, 09/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை