தேர்தல் சட்டத்துக்கு உட்பட்டே பிரசாரம் செய்ய வேண்டும்

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுபவர்கள் தேர்தல் சட்டத்துக்கு இணங்க பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வீண் செலவுகளை மட்டுப்படுத்துவார்கள் என்றும் தாம் எதிர்பார்ப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

தேர்தல் ஆணைக்குழுவுக்கும் அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்குமிடையிலான பேச்சுவார்த்தை நேற்று இராஜகிரியவிலுள்ள தேர்தல் செயலகத்தில் நடைபெற்றது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது செயற்பட

வேண்டிய விதிமுறைகள் மற்றும் தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பிலும் இதன்போது கட்சிகளின் செயலாளர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டதாக தேர்தல் ஆணைக்குழுவின் மேலதிக ஆணையாளர் ரஸிக பீரிஸ் தெரிவித்தார்.

குறிப்பாக தனியார் மற்றும் அரச ஊடகங்களில் மேற்கொள்ளப்படும் தேர்தல் பிரசாரம் தொடர்பில் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் தேர்தல் தொடர்பான காட்சிப்படுத்தல்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டன. அதனையடுத்து தேர்தல் ஆணைக்குழு அது தொடர்பில் தீர்மானமொன்றை மேற்கொண்டு ஓரிரு தினங்களில் அதனை கட்சிகளுக்கு அறிவிப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதேவேளை, தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடும் பிரதேச, மாவட்ட ரீதியான பிரதிநிதிகளின் செயற்பாடுகள் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப் பட்டன. தேர்தல் காலங்களில் வன்முறைகளைத் தவிர்ப்பது பொலித்தீன் பாவனைகளை தவிர்ப்பது போன்ற விடயங்களும் இக்கலந்துரையாடலில் ஆராயப்பட்டுள்ளது.

 

லோரன்ஸ் செல்வநாயகம்

Wed, 09/18/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை