எல்பிட்டிய தேர்தல்; உரிமை மீறல் மனு செப். 24

ஆணைக்குழுவின் வேண்டுகோளுக்கமைய பலத்த பாதுகாப்பு

ஒக்டோபர் 11ஆம் திகதியன்று எல்பிட்டிய பிரதேச சபையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துமாறு கூறி வெளியிடப்பட்ட அரசாங்க வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யக்கோரி மூன்று வாக்காளர்கள் தாக்கல் செய்த அடிப்படை மனித உரிமை மீறல் மனுவை எதிர்வரும் 24ஆம் திகதியன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகளான புவனேக்க அளுவிகாரை, எஸ்.துரைராஜா, முர்து பெர்ணான்டோ ஆகியோரே இம்மனுவை எதிர்வரும் 24 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நேற்று தீர்மானித்தனர்.     2017 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட வேட்புமனுக்கமைய இத்தேர்தல் நடத்தப்படுவதை தடுக்குமாறு கோரியே இம்மனுதாரர்கள் அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடதக்கது.  

எல்பிட்டிய பிரதேச சபையில் ஒக்டோபர் 11ஆம் திகதி நடத்தப்படவுள்ள உள்ளூராட்சி சபை தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் கேட்டுக் கொண்டதற்கமைய பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.  

தபால்மூல வாக்களிப்பு எதிர்வரும் 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற ஏற்பாடாகியுள்ளது. அன்றைய தினம் தபால் மூலம் வாக்களிக்க முடியாதவர்களுக்கு ஒக்டோபர் 04ஆம் திகதியன்று காலி மாவட்டச் செயலகத்தில் தபால் மூல வாக்களிப்பு நடத்தப்படவுள்ளது.  

இவற்றை முன்னிட்டு எல்பிட்டிய மற்றும் காலி பிரதேசங்களில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் பொலிஸ் ரோந்து சேவை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் பேச்சாளர் கூறினார்.  

லக்ஷ்மி பரசுராமன் 

Sat, 09/21/2019 - 09:17


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை