சு.க இன்னும் தீர்மானமில்லை

வேட்பாளரை களமிறக்குவது பற்றி ஆலோசனை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பலப்படுத்த வேண்டுமென்றால் ஜனாதிபதித் தேர்தலுக்கு கட்டாயம் வேட்பாளர் ஒருவரை முன்நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

எதிர்வரும் செம்டம்பர் மாதம் 3ஆம் திகதி நடைபெறவுள்ள சு.கவின் 68ஆவது தேசிய மாநாடு தொடர்பில் நேற்றுமுன்தினம் விசேட பேச்சுவார்த்தைகள் கொழும்பில் அமைந்துள்ள  கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரணதுங்க உட்பட பல சிரேஷ்ட தலைவர்கள் இந்தப் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டனர்.

சந்திப்பின் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட சு.கவின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர,

ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை களமிறக்குவது குறித்து இன்னமும் சு.க தீர்மானிக்கவில்லை. கட்சியின் தனித்துவத்தை பாதுகாக்கும் வேலைத்திட்டங்களை செய்துவருகின்றோம். என்றாலும், தற்போதைய சூழ்நிலையில் கட்சியை வலுப்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது.

அதற்கு முதலில் கட்சியின் யாப்பை மீறி செயற்பட்டுள்ளவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளையே மேற்கொள்ள வேண்டியுள்ளது.

ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பதற்கு அவசரப்பட வேண்டிய அவசியமில்லை. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் வரைக்கு காலம் உள்ளது. இத்தருணத்தில் சு.கவை பலப்படுத்த ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை களமிறக்கும் தேவை எழுந்துள்ள என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

 

Sat, 08/17/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை