ஹபரண-தம்புள்ள வீதியில் கோர விபத்து; 2 பெண்கள் உட்பட மூன்று பேர் பலி

மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனமொன்று வெகனார் காருடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளனர்.

இச்சம்பவம் ஹபரண தம்புள்ள பிரதான வீதியில் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குருநாகல் மல்லவபிட்டி நஸார் மாவத்தையைச் சேர்ந்த 33 வயதான அப்துல் நஸார் ராஜா என்ற வான் சாரதியும், பொலன்னறுவை, முஸ்லிம் கொலனி இல 55/05 வதிவிடத்தைச் சேர்ந்த 40 வயதான சுமுது ஸ்ரீதானா என்ற பெண்ணும் அதே இடத்தைச் சேர்ந்த 27 வயதான சமுதி சப்னா என்ற யுவதியுமே பலியாகியுள்ளனர்.

35 வயதான சமுதி தஸ்லி என்பவரும், 16 வயதான மொஹமட் ரிஷ்வி ரிமாஷா என்ற யுவதியுமே படுகாயமடைந்துள்ளனர்.

வானில் பயணித்த மூன்று பேரே சம்பவ இடத்தில் பலியாகியுள்ளனர். படுகாயமடைந்த நிலையில் ஒரு பெண்ணும் ஆணும் தம்புள்ள ஆஸ்பத்திரியின் விபத்துப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஒரு பெண்ணின் நிலை மோசமாக இருந்ததுடன் அவர் உடனடியாக கண்டி ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பாக தெரியவருவதாவது,

பொலன்னறுவை பகுதியிலிருந்து மணல் ஏற்றிய டிப்பர் வாகனம் தம்புள்ள நோக்கி பயணித்துள்ளது. தம்புள்ளயிலிருந்து பொலன்னறுவை நோக்கி வெகனார் காரும் பணித்துள்ளது. ஹபரண- தம்புள்ள பிரதான வீதியில் குடா மீகஸ்வெவ கும்புக்செவன அருகில் இந்த திடீர் விபத்து இடம்பெற்றுள்ளது.

குருநாகலையிலுள்ள உறவினர் ஒருவரின் வீட்டுக்குச் சென்று பொலன்னறுவையிலுள்ள தங்களது இருப்பீடம் நோக்கி வந்துகொண்டிருந்த போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

வாகனங்கள் முந்திச் செல்லத் தடையென குறிப்பிட்டிருக்கும் இடத்தில் டிப்பர் வாகன சாரதி முன்னாள் சென்று கொண்டிருந்த இரண்டு வாகனங்களை முந்திச் சென்ற போதே எதிரில் வந்த வேகனார் காருடன் மோதி விபத்துக்குள்ளானது என பிரதேச வாசிகள் தெரிவித்தனர்.

விபத்துக்குள்ளான வாகனத்திலிருந்து கண்டெடுக்கப்பட்ட கையடக்க தொலைபேசிகள், அடையாள அட்கைள் ஊடாக இறந்தவர்களின், காயமடைந்தவர்களின் தகவல்கள் பெறப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

டிப்பர் வாகன சாரதியின் கவனமீனமே விபத்துக்கு காரணம் என பொலிஸார் தெரிவித்தனர். டிப்பர் வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

 

Sat, 08/17/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக