எம்.பியின் குழந்தைக்கு பாலூட்டிய சபாநாயகர்

நியூசிலாந்து பாராளுமன்றத்தில் எம்.பி ஒருவரின் குழந்தைக்கு சபாநாயகர் போத்தலில் பால் ஊட்டிய நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.

அந்நாட்டின் தொழிலாளர் கட்சி எம்.பியான டமாட்டி கோஃபி மற்றும் அவரது கணவர் டிம் ஸ்மித் ஆகியோர் வாடகை தாய் மூலம் ஆண் குழந்தையை பெற்றெடுத்தனர். கடந்த ஜூலை மாதம் பிறந்த அந்த குழந்தைக்கு ஸ்மித் கோஃபி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தனது குழந்தையுடன் நேற்று முன்தினம் டமாட்டி பாராளுமன்றத்திற்கு வந்துள்ளார்.

பாராளுமன்ற அலுவல்கள் நடைபெற்றுக் கொண்டு இருந்த போது அவரது குழந்தையை வாங்கிய சபாநாயகர் டிரெவோர் மலார்ட், குழந்தைக்கு போத்தலில் மூலம் பால் ஊட்டினார். பின்னர் தனது இருக்கையை அசைத்து குழந்தையை தட்டிக்கொடுத்து மலார்ட் கவனித்துக்கொண்டார். குழந்தைகள் மீது மிகுந்த பிரியம் கொண்ட மலார்ட், கடந்த 2017ஆம் ஆண்டு எம்.பி வில்லோவ் ஜீன் ப்ரைம்மின் குழந்தையை இதே போன்று பாராளுமன்றத்தில் கவனித்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Fri, 08/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை