இந்தோனேசிய புதிய தலைநகர் அறிவிப்பு

இந்தோனேசியா தனது புதிய தலைநகரை போர்னோ தீவின் கிழக்கு கலிமன்டான் மாகாணத்தில் நிர்மாணிக்கவிருப்பதாக அந்நாட்டு நில திட்டமிடல் அமைச்சர் சொபியான் டிஜாலில் குறிப்பிட்டுள்ளார்.

10 மில்லியன் மக்கள் வாசிக்கும் சூழல் மாசு மற்றும் சன நெரிசல் கொண்ட ஜகார்த்தாவில் இருந்து கலிமன்டானின் ஓர் இடத்திற்கு மாற்றுவதற்கான உத்தியோகபூர்வ பரிந்துரையை ஜனாதிபதி ஜோகோ விடோடோ கடந்த வாரம் பாராளுமன்றத்திற்கு முன்வைத்தார்.

மழைக்காடுகள், ஒரங்குட்டான் மற்றும் நிலக்கரி சுரங்கத்திற்கு புகம்பெற்ற போர்னோவில் ஐந்து மாகாணங்கள் உள்ளன.

“ஆம், கிழக்கு கலிமன்டானில் அது அமையும். ஆனால் சரியாக எங்கு என்று எமக்குத் தெரியாது” என்று டிஜாலில் குறிப்பிட்டார்.

“முதல் கட்ட அபிவிருத்திக்காக மாகாணத்தில் 3,000 ஹெக்டர் நிலம் அரசிடம் உள்ளது” என்றும் அவர் கூறினார்.

தலைநகரை மாற்றும் இந்த திட்டத்திற்கு 33 பில்லியன் செலவு நிர்ணயிக்கப்பட்டுள்ளதோடு இதில் அரசாங்க அலுவலகங்கள், மற்றும் 1.5 மில்லியன் அரச ஊழியர்களுக்கான வீடுகளும் உள்ளடங்குகின்றன. இந்த மாற்றம் 2024 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்படவுள்ளது.

Fri, 08/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை