சகலரின் ஆசிர்வாதமும் எனக்கு கிடைக்கும்

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் குழப்பமற்ற நிலையிலன்றி தாம் மிகுந்த அமைதியான மனநிலையில் உள்ளதாகவும் அனைவரது ஆசீர்வாதமும் தமக்கு கிட்டும் எனவும் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவில் இருந்து சிலரது ஆசீர்வாதமும் தமக்கு கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்குமிடையில் விசேட பேச்சுவார்த்தையொன்று கொழும்பு பாண்ஸ் பிளேஸிலுள்ள மரினா

அவனியுவில் இடம்பெற்றது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஐ.தே.கட்சியின் பின்வரிசை எம்.பிக்கள் அமைச்சர் சஜித் பிரேமதாசவிடம் பேச்சுவார்த்தையொன்றுக்கு கோரியிருந்தனர். அதற்கிணங்க இப் பேச்சுவார்த்தை ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட அமைச்சர்கள் மங்கள சமரவீர, ஹரீன் பெர்னாண்டோ, ஹர்ஷ டி சில்வா, சுஜீவ சேனசிங்க ஆகியோர் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் பல்வேறு கருத்துக்களையும் தெரிவித்தனர். அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ வெற்றி நாள் தொடர்பில் நாம் குழப்பமடையத் தேவையில்லை எனத் தெரிவித்தார். நிதியமைச்சர் மங்கள சமரவீர, எமக்கு கோட்டாபய ராஜபக்ஷ ஒரு பிரச்சினை கிடையாது. ஜனநாயக ரீதியில் எமது கட்சி பேச்சுவார்த்தை நடத்தி ஓரிரு தினங்களில் சாதகமான தீர்மானமொன்றை மேற்கொள்ளும் என்றார். ஐ.தே. கட்சியின் தலைமையில் அமைக்கவுள்ள கூட்டணி தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், கூட்டணி அமைப்பதில் சிறந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

 

லோரன்ஸ் செல்வநாயகம்

 

Thu, 08/22/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை