அமெ. பதில் உதவி செயலர் மஹிந்தவுடன் சந்திப்பு

Acting Assistant Secretary of US Dept of State Alice Wells Meets Opposition Leader Mahinda Rajapaksa

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள, அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின், மத்திய மற்றும் தெற்காசிய விவகாரங்களுக்கான அமெரிக்க பதில் உதவி செயலாளர் அலிஸ் வேல்ஸ் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார்.

இன்று (11) காலை விஜேராம வீதியிலுள்ள மஹிந்த ராஜபக்‌ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்பிளிட்ஸும் கலந்து கொண்டதாக எதிர்க்கட்சித் தலைவரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அலிஸ் வேல்ஸ், ஓகஸ்ட் 06 ஆம் திகதியிலிருந்து 16 ஆம் திகதி வரை பாகிஸ்தான், இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கான விஜயத்தில் ஈடுபட்டுள்ளதாக, அமெரிக்கா இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.

அவர் தனது விஜயத்தின்போது, அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

Sun, 08/11/2019 - 13:54


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை