சீனாவில் சூறாவளி தாக்கம்: 28 பேர் உயிரிழப்பு

சீனாவில் வீசிய லெகிமா (Lekima)  சூறாவளி காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 28ஆக உயர்வடைந்துள்ளதோடு, 20பேர் காணாமல் போயுள்ளதாகவும், அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

சீனாவின் செஜியாங் (Zhejiang)  மாகாணத்திலேயே நேற்று (10) லெகிமா சூறாவளி தாக்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து குறித்த மாகாணத்தில் சுமார் 05மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, ஒரு மில்லியனுக்கும் அதிகளவான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும், அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

லெகிமா சூறாவளி தாக்கியதை தொடர்ந்து மண்சரிவு ஏற்பட்டுள்ளது. பலத்த காற்று வீசியதோடு, அடை மழையும் பெய்து வருகின்றது.

Wenzhou நகரிலேயே அதிகளவான உயிரிழப்புகள் சம்பவித்துள்ளன. இங்கு பெய்த மழையால் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

லெகிமா சூறாவளி காரணமாக செஜியாங் மாகாணத்தில் சுமார் 34,000 வீடுகள் சேதமடைந்துள்ளன.

Sun, 08/11/2019 - 14:27


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை