ரெட் ரோஸ் அணி வெற்றி

இலங்கை உதைபந்தாட்டச் சம்மேளம் நடாத்தும் டிவிஷன் - 2 கிண்ணத்துக்கான உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் நீர்கொழும்பு ரெட் ரோஸ் அணி வெற்றி பெற்றது.கொழும்பு ஸ்ரேடியம் கம உதைபந்தாட்ட அணியை எதிர்த்தாடிய ரெட் ரோஸ் அணி 2 - 0 என்ற கோல் அடிப்படையில் தேசிய உதைப்பந்தாட்ட தர வரிசையில் 2ம் பிரிவின் முதற் போட்டியில் வெற்றி பெற்றது.

ரெட் ரோஸ் அணியின் முன் வரிசை வீரர் எம்.ஷிபான் தனது அணிக்காக 2 கோல்களைப் போட்டு வெற்றி பெறச்செய்தார். இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் மத்தியஸ்தர்கள் மேற்படி போட்டியில் மத்தியஸ்தர்களாகக் கடமையாற்றினர். இலங்கை உதைபந்தாட்ட அணியின் முன்னாள் பின் வரிசை வீரரும் விமானப்படை வீரருமான மொஹமட் இம்தியாஸ் ரெட் ரோஸ் அணியின் பயிற்றுவிப்பாளராகக் கடமையாற்றுகிறார்.

நீர்கொழும்பு தினகரன் நிருபர்

Fri, 08/30/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை