மாவட்ட மட்ட கிரிக்கெட் சம்பியனாக சென். அந்தனிஸ் அணி தெரிவு

திருகோணமலை மாவட்ட கிரிக்கெட் சபை (TDCA) நடாத்தப்பட்ட 50 ஓவர்கள் கடின பந்து கிரிக்கெட் போட்டித் தொடரின் 3ஆம் பிரிவுக்கான வெற்றிக் கிண்ணத்தை திருகோணமலை சென். அந்தனிஸ் அணி கைப்பற்றி 2019 ஆம் ஆண்டின் சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் போட்டித் தொடரின் இறுதிப் போட்டி நேற்று (27) திருகோணமலை இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம் பெற்றது.

15 கிரிக்கெட் அணிகள் பங்குபற்றிய இந்த போட்டித் தொடரின் முதலாவது அரை இறுதி ஆட்டத்தில் சென் அந்தோனிஸ் விளையாட்டுக் கழக அணி ( St. Antony's s.c ) திருகோணமலை டைனமிக் விளையாட்டுக் கழக அணியை ( Dynamic s.c ) எதிர்த்தாடியது. இதில் ஒரு விக்கெட்டால் வெற்றி பெற்று

சென். அந்தனிஸ் அணி இறுதி ஆட்டத்துக்குள் நுழைந்தது.

இரண்டாவது அரை இறுதி ஆட்டத்தில், திருகோணமலை வேல்ஸ் (wells) அணியும் திருகோணமலை ஸ்பென்ஸ்( Spence) அணியும் மோதிக் கொண்டதில், வேல்ஸ் (wells) அணி 3 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்று இறுதி ஆட்டத்தில் விளையாடுவதற்கான தகுதியைப் பெற்றுக் கொண்டது.

இறுதி ஆட்டத்தில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற திருகோணமலை வேல்ஸ் அணி முதலில் சென் அந்தனிஸ் அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.

இதற்கினங்க, 48 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 185 ஓட்டங்களைக் சென். அந்தனிஸ் அணி பெற்றுக் கொண்டது.

186 எனும் வெற்றி இலக்கை நோக்கி களம் இறங்கிய வேல்ஸ் அணி 37 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து, 110 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது. இதனால் 75 ஒட்டங்களால் சென் அந்தனிஸ் அணி வெற்றி பெற்று திருகோணமலை மாவட்ட 2019 ஆண்டுக்கான வெற்றிக் கிண்ணத்தை கைப்பற்றிக் கொண்டது.

தொடரின் சிறந்த வீரராக வேல்ஸ் அணியில் இருந்து சதீஸ் என்பவரும் இறுதிப் போட்டியின் சிறப்பாட்டக்காரராக சென். அந்தனிஸ் அணியின் அதீத் என்பவரும் தொடரின் சிறந்த துடுப்பாட்ட வீரராக சென் அந்தனிஸ் அணி வீரரான என்.பீ.எம். நெளபானும் தெரிவு செய்யப்பட்டனர்.

சம்பியன் அணிக்கு 20 ஆயிரம் ரூபா பணப் பரிசும் கேடயமும் வழங்கப்பட்டதோடு, இரண்டாம் நிலை அணிக்கு 15 ஆயிரம் ரூபா பணப் பரிசும் கேடயமும் வழங்கப்பட்டது. இதனை இறுதிப் போட்டியின் அதிதிகளாகக் கலந்து கொண்ட திருகோணமலை மாவட்ட கிரிக்கெட் சபையின் முன்னாள் தலைவர்களான என். பிரபாகரன் மற்றும் பஸுர் அமீர் ஆகியோர் வழங்கி வைத்தனர்.

கிண்ணியா மத்திய நிருபர்

Fri, 08/30/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை