மிருகக்காட்சி சாலைக்கு காட்டு யானைகள் தடை

காடுகளில் இருந்து பிடிக்கப்படும் ஆபிரிக்க யானைகளை மிருகக்காட்சி சாலைகளுக்கு அனுப்புவதை கிட்டத்தட்ட முற்றாக தடை செய்வதற்கு உலக வனவிலங்கு வர்த்தகத்தை ஒழுங்குபடுத்தும் அமைப்பில் இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

ஜெனீவாவில் கடந்த செவ்வாய்கிழமை நடைபெற்ற அருகிவரும் உயிரினங்களின் சர்வதேச வர்த்தகம் தொடர்பான அரச தரப்புகளின் மாநாட்டிலேயே கடும் விவாதத்திற்கு பின்னர் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு வெளியிட்ட சிம்பாப்வே இதற்கான வாக்கெடுப்பை தடுக்கவும் முயற்சித்தது. ஆபிரிக்க யானைகளை மிருகக்காட்சி சாலைகளுக்கு வழங்குவதில் சிம்பாப்வே மற்றும் பொட்சுவானா நாடுகளே அதிக பங்களிப்புச் செய்கின்றன. இதற்கு எதிராக அமெரிக்காவும் வாக்களித்தது. எனினும் இந்த வாக்கெடுப்பில் 87 வாக்குகள் ஆதரவாகவும், 29 வாக்குகள் எதிராகவும் பதிவானதோடு 25 நாடுகள் வாக்களிப்பதை தவிர்த்துக் கொண்டன. இதன்மூலம் தேவையான மூன்றில் இரண்டு வாக்குகளுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Thu, 08/29/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை