கொங்கோ எல்லை நகரில் இரண்டாமவருக்கு எபோலா

கொங்கோ ஜனநாயக குடியரசின் ருவாண்டா நாட்டுடனான எல்லை பகுதியில் இரண்டாவது எபோலா சம்பவம் பதிவாகி இருக்கும் நிலையில், அந்த உயிர்கொல்லி நோய் பரவும் அபாயம் அதிகரித்துள்ளது.

இரண்டு மில்லியன் மக்கள் தொகை கொண்ட கோமா நகரில் இந்த எபோலா பாதிப்பை அதிகாரிகள் உறுதி செய்தனர்.

கடந்த 2018 ஓகஸ்ட் மாதம் எபோலா வைரஸ் மீண்டும் தோன்றிய நிலையில் கொங்கோ நாட்டில் இதுவரை இந்த நோயால் 1,600க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தபோதும் இதுவரை அந்த நோய் பாதிப்பு தொலைதூர பகுதிகளிலேயே இருந்து வந்தது.

இது குறித்து உலக சுகாதார அமைப்பு கடந்த வாரம் சர்வதேச சுகாதார அவசர நிலை ஒன்றை பிரகனம் செய்தது. இதற்கு முன்னர் இவ்வாறான பிரகடனம் ஒன்று மூன்று தடவையே வெளியிடப்பட்டிருக்கும் நிலையில் இது ஒரு உயர் அச்சுறுத்தலாக கருதப்படுகிறது. கடைசியாக 2014 தொடக்கம் 2016 வரை ஆபிரிக்காவின் ஒரு பகுதியில் பேரழிவை ஏற்படுத்திய எபோலா வைரசினால் 11,000க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர்.

கொங்கோவின் வடக்கு கிவு மற்றும் இடுரி என்ற இரு மாகாணங்களிலேயே தற்போது எபோலா தொற்று உள்ளது. இதில் கோமா நகர் வடக்கு கிவுவின் தலைநகர் என்பதோடு ருவாண்டாவின் எல்லையில் அமைந்துள்ளது.

இதுவரை இந்த வைரஸ் தொலைதூரப் பகுதிகளில் தொற்றி இருந்தது. எனினும் கடந்த மாத ஆரம்பத்தில் கோமா நகரில் மதப் போதகர் ஒருவருக்கு எபோலா தொற்றியது உறுதி செய்யப்பட்டது ஒரு திருப்புமுனை என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்தது.

இந்நிலையில் கோமாவில் இரண்டாவது எபோலா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானவர் கண்டுபிடிக்கப்பட்டதாக வடக்கு கிவு அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

Thu, 08/01/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை