ஸ்ரீல.சு.கட்சியின் ஆதரவு பொதுஜன பெரமுனவுக்கே

ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கே கிடைக்குமென எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். 

அத்துடன், ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை மாற்றும் எவ்வித நிலைப்பாடும் இல்லை என்றும் அவர் கூறினார். 

கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். 

அவர் மேலும் தெரிவிக்ைகயில், 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரை நாம் உரிய தருணத்தில் அறிமுகப்படுத்தி வைத்துள்ளோம். ஐக்கிய தேசியக் கட்சிக்குள் எழுந்துள்ள நெருக்கடிகளால் ஒரு வேட்பாளரை தெரிவுசெய்துக்கொள்ள முடியாதுள்ளனர். என்றாலும், நாம் முழு நாடும் எதிர்பார்த்த ஒரு வெற்றி வேட்பாளரை அறிமுக்கப்படுத்தியுள்ளோம். 

சு.கவுக்கும், பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் நடத்தப்படும் பேச்சுவார்த்தையானது கட்சிகள் இரண்டும் ஒன்றுப்படுவதற்கு அப்பால் எமது ஜனாதிபதி வேட்பாளரை வெற்றிபெற செய்யும் இணக்கப்பாடுகளே எட்டப்படுகின்றன. அந்தப் பேச்சுகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.அதேபோல் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷவை மாற்றும் எவ்வித எண்ணமும் நிலைப்பாடும் எமக்கில்லை என்றார்.  

சுப்பிரமணியம் நிஷாந்தன்  

Sat, 08/31/2019 - 09:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை