பெற்றோல், சூப்பர் டீசல் விலை அதிகரிப்பு

அரசாங்கத்தின் எரிபொருள் விலை சூத்திரத்திற்கமைய பெற்றோல், சுப்பர் டீசலின் விலைகள் நேற்று நள்ளிரவுமுதல் அமுலுக்கும் வரும்வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. அதன் பிரகாரம் 92 ஒக்றேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 2 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 138 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது. 

92 ஒக்றேன் பெற்றோல் ஒரு லீற்றர் இதுவரை 136 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையிலேயே நேற்று நள்ளிரவு முதல் 2 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 95 ஒக்றேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 4 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 163 ரூபாவிற்கும் (பழைய விலை - ரூ.159), சுப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலை 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 134 (பழைய விலை -ரூ.131) ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படவுள்ளன. ஒட்டோ டீசலின் விலையில் எவ்வித மாற்றம் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Wed, 08/14/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை