உடப்பூர் தீ மிதிப்பு உற்சவம் இன்று

உடப்பு ஸ்ரீ ருக்மணி சத்தியபாமா சமேத ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் திரௌபதையம்மன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் 18ஆம் நாளான இன்று இரவு 7 மணிக்கு தீ மிதிப்பு உற்சவம் நடைபெறும்.

இதில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீமிதிப்பில் கலந்துகொள்ளவர்.

இன்றைய உற்சவத்திற்கு நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் வருகை தருவதுடன் சிலாபம் நகரிலிருந்து உடப்பூர் வரை விஷேட போக்குவரத்து ஏற்பாடுகளும் உடப்பூர் இந்து ஆலய சபையினால் செய்யப்பட்டுள்ளன.

உடப்பு குறூப் நிருபர்

Wed, 08/14/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை