உள்ளூர் அபிவிருத்தி திட்டத்தின் கருத்தரங்கு ஆரம்பம்

கிழக்கு மாகாண உள்ளூர் அபிவிருத்தி உதவித் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வும், கருத்தரங்கும் நேற்று திருகோணமலை கலாசார மண்டபத்தில் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் என். மணிவண்ணன் தலைமையில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாணத்தில் 45 உள்ளுராட்சி மன்றங்களை சேர்ந்த தலைவர்களும், செயலாளர்களும், உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர். உலக வங்கியும், ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்து இலங்கையில் நான்கு மாகாணங்களில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதாகவும், அதில் கிழக்கு மாகாணத்தில் எவ்வாறான திட்டங்களை மேற்கொண்டு வருவதாகவும் அதனை எவ்வாறு முன்னேற்றுவது தொடர்பாகவும் தெளிவூட்டப்பட்டது.

வட மத்திய, ஊவா, வட மாகாணம் மற்றும் கிழக்கு மாகாணம் ஆகிய நான்கு மாகாணங்களில் அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டு வருவதாகவும் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் சரத் அபேகுணவர்தன தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் இயங்குகிற 45 உள்ளூராட்சி மன்றங்களுடைய சேவை வழங்கும் திறனை விருத்தி செய்து அதனூடாக மக்களுக்கு சேவை வழங்க கூடிய இயல்பு நிலையை உருவாக்குவதற்காக இச் செயற்றிட்டம் அமைகின்றது.

 

ரொட்டவெவ குறூப் நிருபர்

 

Sat, 08/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை