30 வருடமாக மீளமைக்கப்படாத நெல் கொள்வனவு கட்டடம்

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள நெல் சந்தைப்படுத்தல் சபைக்குரிய. தோப்பூர் நெல் கொள்வனவு நிலையக்கட்டடமானது 30 வருடங்களாகியும் இன்னும் புனரமைக்கப்படவில்லையென இப் பகுதி விவசாயிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இதனால் அறுவடை காலத்தில் அறுவடையாகும் நெல்லை உரிய உத்தரவாத விலைக்கு விற்பனை செய்ய முடியாதுள்ளதாகவும் குறிப்பிடுகின்றனர்.

இது தொடர்பாக அவ் விவசாயிகள் கூறுகையில்,

மூதூர் பிரதேசத்தில் ஆயிரக் கணக்கான ஏக்கரில் விவசாயிகள் நெற் செய்கை மேற்கொள்கிறார்கள். தோப்பூரில் நெல் சந்தைப்படுத்தல் சபைக்குரிய நெல் கொள்வனவு செய்யும் நிலையத்திற்கு இங்குள்ள விவசாயிகள் அறுவடை செய்யப்படும் நெல்லை உத்தரவாத விலைக்கு விற்பனை செய்து வந்தார்கள்.

யுத்தம் காரணமாக 1990 களில் நெல் கொள்வனவு நிலையம் அழிந்து சேதமடைந்த போதும் மீள இதனை புனரமைத்துக்கொடுக்க உரிய அதிகாரிகளோ திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களோ கவனம் செலுத்தவில்லையென இப் பகுதி விவசாயிகள் கவலை வெளியிடுகின்றனர்.

 

தோப்பூர் தினகரன் நிருபர்

Sat, 08/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை