ஸ்மித் அபார சதம்: ஆஸி. ஸ்திர ஓட்டம்

இங்கிலாந்தின் நெருக்கடிக்கு மத்தியில் ஸ்டிவ் ஸ்மித்தின் 144 ஓட்டங்கள் மூலம் ஆஷஸ் தொடரின் முதல்நாளில் அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸுக்கு 284 ஓட்டங்களை பெற்றது.

பந்தை சேதப்படுத்திய சர்ச்சையால் போட்டித் தடைக்கு உள்ளான பின்னர் மீண்டும் டெஸ்ட் போட்டிகளுக்கு திரும்பிய நிலையிலேயே ஸ்மித் இந்த சதத்தை பெற்றார்.

எஜ்பாஸ்டனில் கடந்த வியாழக்கிழமை ஆரம்பமான முதலாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த அவுஸ்திரேலிய அணி 122 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. எனினும் ஒருமுனையில் அபாரமாக துடுப்பெடுத்தாடிய ஸ்மித் 9ஆவது விக்கெட்டுக்கு பீட்டர் சிடிலுடன் இணைந்து 88 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டு அணியை கரைசேர்த்தார். சிடில் 44 ஓட்டங்களை பெற்றார்.

இதன்மூலம் அவுஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 80.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 284 ஓட்டங்களை பெற்றது. இங்கிலாந்து அணி சார்பில் ஸ்டுவர்ட் பிரோட் 5 விக்கெட்டுகளை பதம்பார்த்தார். கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

முதல் நாள் ஆட்டத்தின் கடைசி நேரத்தில் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இங்கிலாந்து அணி ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 10 ஓட்டங்களை பெற்றிருந்தது.

Sat, 08/03/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை