தாய்லாந்து - கம்போடியா எல்லையில் Angkor புதிய நகருக்கு ஜனாதிபதி விஜயம்

தேரவாத பௌத்த மதத்தைப் பின்பற்றும் நாடுகள் என்ற வகையில் கம்போடியாவிற்கும் இலங்கைக்குமிடையிலான பௌத்த உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (09) கம்போடியாவில் பல்வேறு நிகழ்வுகளில் பங்குபற்றினார்.

தாய்லாந்து – கம்போடியா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கம்போடிய பௌத்த மரபுரிமையாக கருதப்படும் யுனெஸ்கோ மரபுரிமையான Angkor புதிய நகருக்கு ஜனாதிபதி விஜயம் செய்தார். கம்போடிய பிரதி பிரதமர் மற்றும் அரச மாளிகையின் அமைச்சர் Samdech Chaufea Veang kong Som Ol வும் ஜனாதிபதியுடன் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.

Siem Reap விமான நிலையத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினரை Siem Reap பிரதேச ஆளுநர் Tea Seiha உள்ளிட்ட அதிகாரிகள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

புராதன கம்போடிய வாஸ்து முறைக்கமைய நிர்மாணிக்கப்பட்ட Angkor Wat விகாரையை ஜனாதிபதி பார்வையிட்டார்.

170 ஹெக்டெயார் பரப்பளவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த விகாரை 12ஆம் நூற்றாண்டில் சூரியவர்மன் மன்னனால் நிர்மாணிக்கப்பட்டதென்பதும் குறிப்பிடத்தக்கது.அதனைத் தொடர்ந்து Angkor நகரத்தில் அமைந்துள்ள Bayon விகாரைக்கும் ஜனாதிபதி விஜயம் செய்தார்.

இலங்கைக்கும் கம்போடியாவிற்குமிடையிலான நீண்டகால நட்பு பௌத்த மதத்தை அடிப்படையாகக் கொண்டது. தேரவாத பௌத்த மதத்தை பாதுகாப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்களுக்கு அவ்விகாரையின் பிக்குகள் ஒத்துழைப்பு வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.

பௌத்த மதத்தைப் போன்றே விவசாய ரீதியாகவும் இலங்கைக்கும் கம்போடியாவிற்குமிடையில் நெருக்கமான தொடர்பு காணப்பட்டு வருவதுடன் Angkor இல் அமைந்துள்ள Artisan D angkor நிலையம் மற்றும் கைவினைப்பொருட் கண்காட்சி, தொழில் பயிற்சி நிலையம் ஆகியவற்றையும் ஜனாதிபதி பார்வையிட்டார்.

 

Sat, 08/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை