நியூசிலாந்துடனான இரண்டாவது டெஸ்ட்: இலங்கை 85/2 ஓட்டங்கள்

போதிய வெளிச்சமின்மையால் போட்டி இடைநிறுத்தம்

நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் போதிய வெளிச்சமின்மையால் முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்தது. இலங்கை அணி 85 ஓட்டங்களுக்கு இரண்டு விக்கெட்டுக்களை இழந்துள்ளது.இந்த போட்டி 36.3 பந்துகளே வீசப்பட்டமை குறிப்பிடத்தக்கது.இலங்கை அணி சார்பாக அணியின் தலைவர் கருணாரத்ன 49 ஓட்டங்களுடனும் மெத்திவ்ஸ் ஓட்டம் எதுவும் இல்லாமல் களத்தில் உள்ளனர்.திரிமான்ன இரண்டு ஓட்டங்களுடனும் குசல் மென்டிஸ் 32 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.நியூசிலாந்து அணி சார்பாக வில் சமர்வில்,கொலின் டி கிரெண்டோம் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் கொழும்பு பி. சரா ஓவல் மைதானத்தில் ஆரம்பமான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது அதன் படி இல்ஙகை அணி சார்பாக ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களாக அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன மற்றும் லகிரு திரிமான்ன ஆகியோர் களமிறங்கினர்.

போட்டி ஆரம்பமாவதற்கு முன்னர் மழைக் குறுக்கிட்டதன் காரணமாக மதியபோசன இடைவேளைக்கான நேரம் எடுக்கப்பட்ட நிலையில், போட்டி பிற்பகல் 1.40 இற்கு ஆரம்பமானது.

இரண்டு அணிகளுக்கும் இடையில் காலியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரில் 1--0 என முன்னிலை வகிக்கின்றது. இந்த நிலையில், தொடரை கைப்பற்றும் நோக்கில் இலங்கை அணியும், தக்கவைக்கும் நோக்கில் நியூசிலாந்து அணியும் களமிறங்குகின்றன. இலங்கை அணியை பொறுத்தவரை, ஐசிசி விதிமுறையை மீறி பந்துவீசுகின்றார் என்ற குற்றச்சாட்டுக்கு முகங்கொடுத்துள்ள அகில தனஞ்சயவுக்கு பதிலாக டில்ருவான் பெரேரா இணைக்கப்பட்டார்.

இலங்கை அணி

திமுத் கருணாரத்ன (தலைவர்), லஹிரு திரிமான்ன, குசல் மெண்டிஸ், அஞ்செலோ மெத்திவ்ஸ், குசல் பெரேரா, நிரோஷன் டிக்வெல்ல, தனஞசய டி சில்வா, டில்ருவான் பெரேரா, லசித் எம்புல்தெனிய, லஹிரு குமார, சுரங்க லக்மால்

நியூசிலாந்து அணியில் ஒரு மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மிச்சல் சாட்னருக்கு பதிலாக கொலின் டி கிரெண்டோம் இணைக்கப்பட்டுள்ளார்.

நியூசிலாந்து அணி

டொம் லேத்தம், ஜீட் ராவல், கேன் வில்லியம்சன் (தலைவர்), ரொஸ் டெய்லர், ஹென்ரி நிக்கோல்ஸ், பிஜே வெட்லிங், கொலின் டி கிரெண்டோம், டிம் சௌதி, ட்ரென்ட் போல்ட், வில் சமர்வில், அஜாஷ் பட்டேல்.

இன்று போட்டியின் இரண்டாவது நாளாகும்.

Fri, 08/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை