சவேந்திர சில்வாவின் நியமனம் பிற்போக்குத் தனமான செயற்பாடு

இலங்கையில் 2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தில் பல்வேறு விதமான இனப் படுகொலைக்கு காரணமாக இருந்து சர்வதேச சமூகத்தினால் போர்க் குற்றஞ்சாட்டப்பட்ட சவேந்திர சில்வாவை இராணுவ தளபதியாக நியமித்திருப்பது மிக பிற்போக்குத்தனமான செயற்பாடு என தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் மன்னார் மாவட்ட அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

மேலும் அவர் கூறுகையில்,

யுத்தம் முடிவுற்று 10 ஆண்டுகள் கடந்துவிட்டபோதும் இவர் மீது பல்வேறு விதமான போர் குற்றச்சாட்டுக்கள் உள்ளன. இந் நிலையில் பல்வேறு மனித உரிமை தரப்புக்கள் இவர் மீது விசாரனைகள் நடாத்தப்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருக்கும் நிலையில் இந் நியமனம் மிக மோசமானதாகும்.

ஏனெனில் நல்லாட்சி எனும் கோசத்துடன் வந்த அரசாங்கத்தினுடைய ஜனாதிபதி இந் நியமனத்தை செய்திருப்பது நல்லாட்சி என்கின்ற கோசத்திற்கு ஒரு மோசமான பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

மன்னார் குறூப் நிருபர்

Fri, 08/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை