இலங்கை கிரிக்கெட் சபை அணி 323 ஓட்டங்கள் குவிப்பு

நியூசலாந்து அணிக்கு எதிராக மூன்று நாள் பயிற்சிப் போட்டியில் இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் பதினொருவர் அணி முதல் இன்னிங்ஸுக்கு 323 ஓட்டங்களை பெற்றது.

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய மைதானத்தில் நேற்று ஆரம்பமான இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற அஷான் பிரியன்ஜன் தலைமையிலான இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் பதினொருவர் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

ஆரம்ப வீரர்களாக களமிறங்கிய தனுஷ்க குணதிலக்க மற்றும் சதீர சமரவிக்ரம 154 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டனர். இதன்போது குணத்திக்க 2 ஓட்டங்களால் சதத்தை தவறவிட்டார். மறுமுனையில் சிறப்பாக ஆடிய சமரவீரம 90 பந்துகளில் 80 ஓட்டங்களை பெற்றார்.

எனினும் மத்திய வரிசையில் ஓஷத பெர்னாண்டோ மற்றும் பானுக்க ரஜபக்ஷ ஆகியோர் சோபிக்கத் தவறினர். அணித்தலைவர் பிரியன்ஜன் சிறப்பாக ஆடி 56 ஓட்டங்களை பெற்று அணிக்கு மேலும் வலுச் சேர்த்தார்.

இதன்மூலம் இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவின்போது 65.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 323 ஓட்டங்களை எடுத்தது.

இன்று போட்டியில் இரண்டாவது நாளாகும்.

Fri, 08/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை