மட்டு. மாவட்டத்தில் வறட்சி; 25000 குடும்பங்கள் பாதிப்பு

அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார்

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியான சூழலை முகாமைத்துவம் செய்யும் இணைப்புக் குழுவின் விசேட கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தலைமையில் நேற்றுமுன்தினம் (06) இடம்பெற்றது. இக்கூட்டத்தில் உன்னிச்சை குடிநீர்த்திட்டத்தினால் குடிநீர் மற்றும் விவசாய பயிர்ச் செய்கைக்கு எவ்வாறு நீரைப்பகிர்ந்து கொள்வது பற்றியும் ஆராயப்பட்டது.
இதில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.சியாத், பாதிப்புக்கள் பற்றிய அறிக்கையினை சமர்பித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் வறட்சியினால் 25005 குடும்பங்களைச் சேர்ந்த 82,570 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் மூலம் 26 இலட்சம் ரூபா நிதியில் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருவதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
மாவட்டத்தில் கிரான், வாழைச்சேனை, ஓட்டமாவடி, வெல் லாவெளி, செங்கலடி,ஏறாவூர் நகரம், களுவாஞ்சிகுடி, வாகரை, வாழைச் சேனை மத்தி, வவுணதீவு ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளில் 99 கிராம சேவகர் பிரிவுகள் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளதாகவும் மாவட்ட அவர் மேலும் தெரிவித்தார்.
இத்துடன் 7723 ஏக்கர் நெல் வயலும் 629 ஏக்கர் மேட்டு நிலபயிர்களும் 750 நன்னீர் மீனவர்களும், கால்நடை வளர்ப்பும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(மட்டக்களப்பு சுழற்சி நிருபர்)
 

Thu, 08/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை