இராணுவ வசமிருந்த 23 ஏக்கர் விடுவிப்பு

விரைவில் மக்களிடம் கையளிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் படையினர் வசமிருந்த காணிகளுள் 23 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. இதற்கான ஆவணங்களைக் கையளிக்கும் நிகழ்வு நேற்றுக் காலை 10.30 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. கிளிநொச்சி, கரைச்சி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கிருஷ்ணபுரம் பகுதியில் படையினரின் பயன்பாட்டிலிருந்த காணிகளே இவ்வாறு கையளிக்கப்பட்டன. இதற்கான ஆவணங்கள் கிளிநொச்சி மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் கையளிக்கப்பட்டன. கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்திடம் கிளிநொச்சி இராணுவ தலைமையக கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ரவிப்பிரிய, இதற்கான ஆவணங்களை கையளித்தா்ர.

காணி விடுவிப்பு தொடர்பில் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ரவிப்பிரிய ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

படையினர் வசமிருந்த 23 ஏக்கர் காணிகளை விடுவித்து கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.இதேவேளை மேலும் பல காணிகளை விடுவிப்பதற்காக அடையாளம் கண்டுள்ளதாகவும் அவற்றை விடுவிப்பது தொடர்பிலான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார். தனியார் காணிகளை இவ்வாறு விரைவாக விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இக்காணி விடுவிப்பு தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

படையினரால் கரைச்சி பிரதேச செயலர் பிரிவில் 23 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி குறூப்,பரந்தன்குறூப் நிருபர்கள்

Fri, 08/16/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை