CWC Final-2019: ENGvNZ; நியூசிலாந்து முதலில் துடுப்பாட்டம்

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொள்ளும் நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இறுதிப் போட்டியில் நாணய சுழற்சில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டி பிரிட்டன் நேரப்படி இன்று காலை 10.30இற்கு (இலங்கை நேரப்படி மாலை 3.00மணிக்கு) லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் போட்டிகள் ஆரம்பமாகின்றன.

1992ஆம் ஆண்டு Graham Gooch தலைமையில் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்று பாகிஸ்தானிடம் தோல்வியடைந்த இங்கிலாந்து அணி 27ஆண்டுகளின் பின்னர் தனது சொந்த மண்ணில் மீண்டும் Eoin Morgan தலைமையில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இங்கிலாந்து - நியூஸிலாந்து அணிகளுகிடையே இன்று நடைபெறவுள்ள உலகக் கிண்ண இறுதி கிரிக்கெட் போட்டிக்கு நடுவர்களாக இலங்கையின் குமார் தர்மசேன, தென்னாப்பிரிக்காவின் மரியாஸ் எரஸ்மஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஐ.சீ.சீ. நேற்று இதனை அறிவித்துள்ளது. 

அவுஸ்திரேலியா-, இங்கிலாந்து அரையிறுதி ஆட்டத்தின்போது நடுவர்களாக செயல்பட்ட இலங்கையின் குமார் தர்மசேனா, தென்னாப்பிரிக்காவின் மரியாஸ் எரஸ்மஸ் ஆகியோரே இறுதிப் போட்டியின் நடுவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலியாவின் ராட் டக்கர் மூன்றாவது நடுவராகவும், பாகிஸ்தானின் ஆலிம் தர் நான்காவது நடுவராகவும் செயல்படுவர். 

Sun, 07/14/2019 - 15:12


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை