பல்கலை மானியங்கள் ஆணைக்குழு சட்டத்தை மறுசீரமைக்க வேண்டும்

தவறினால் மட்டு. பல்கலை போன்று சர்ச்சைகள் உருவாகும்

தனியார் பல்கலைக்கழகங்களை உருவாக்கவும், அவற்றுக்குத் தேவையான வகையில் பட்டமளிப்புகளை மேற்கொள்ளவும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளமையே மட்டக்களப்பு போன்ற பல்கலைக்கழகங்கள் உருவாக காரணமாகும். 1985ஆம் ஆண்டில் 1978ஆம் ஆண்டு 16ஆம் இலக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தை மறுசீரமைக்க வேண்டும் என்பதே ஜே.வி.பியின் நிலைப்பாடு என பாராளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

ஜே.வி.பியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், எமது நாட்டில் இன்று அரசாங்கமொன்று இல்லை. அரசாங்கமொன்று இல்லாதுபோனால் மக்கள் பிரச்சினைகள் தொடர்பில் தலையீடு செய்யும் அரச நிறுவனங்கள் செயலிழந்துபோகும். இன்று அவ்வாறான நிலைமைதான் உருவாகியுள்ளது. அத்தியாவசியப்பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான விலைகளும், கட்டணமும் அதிகரித்துவந்திருந்த சூழலில் கோதுமை மாவின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மக்கள் தொடர்பில் சிந்தித்து தீர்மானம் எடுத்தால் இவ்வாறான நிலைமைகள் ஏற்படாது. கோதுமை மாவின் விலை அதிகரித்துவிட்டு அதற்கான காரணமாக கோதுமை சாப்பிடுவது சுகாதாரத்துக்கு ஏற்புடையதல்லவென அரசாங்கம் கூறுகிறது. இதனை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்.

அத்துடன், எமது நாட்டில் இன்று பாரிய பிரச்சினையாக மறியுள்ளதாவது பல்கலைக்கழக சட்டத்தில் மேற்கொள்ளப்படுள்ள திருத்ததால் தனியார் பல்கலைக்கழங்களில் பட்டங்கள் பெற்றுக்கொள்வதற்கு ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ள சந்தர்ப்பங்களாகும். தனியார் பல்கலைக்கழங்களில் அவர்களின் தனிப்பட்ட சட்டங்களுக்கு அமைவாகவே பட்டங்கள் வழங்கப்படுகின்றன.

எமது நாட்டில் பல்கலைக்கழக விதிமுறைகளை நிர்ணயிக்கவே பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. 1978ஆம் ஆண்டு 16ஆம் இலக்கச் சட்டத்தின பிரகாரமே பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

 

Thu, 07/18/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை