தபால் ஊழியர் வேலைநிறுத்தம்

மத்திய தபாலகத்தில் பொதிகள் தேக்கம்

பேச்சுவார்த்தைக்கு அழைப்பின்றேல் போராட்டம் தொடரும்

செய்தி 4ம் பக்கம்

தபால் சேவை ஊழியர்கள் மேற்கொண்டுள்ள வேலை நிறுத்தப் போராட்டம் நேற்று இரண்டாவது நாளாகவும் இடம்பெற்றதுடன் சுமார் இரண்டு இலட்சம் தபால்கள் மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் குவிந்துள்ளதாக தபால் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்தது.

தமது தொழிற் சங்கம் ஆரம்பித்துள்ள 48 மணித்தியால வேலை நிறுத்தப் போராட்டம் நிறைவடைவதற்குள் அமைச்சர் அல்லது அரசாங்கத் தரப்பிலிருந்து திருப்திகரமான பதில் கிடைக்காவிடின் தொடர்ச்சியான வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதிக்க நேரும் என சங்கத்தின் இணைப்புச் செயலாளர் சிந்தக பண்டார தெரிவித்தார்.

இதுவரை எவரும் தமது தொழிற்சங்கத்துடன் பேச்சுவார்த்தைக்கான அழைப்பை விடுக்கவில்லையென்றும் அவர் தெரிவித்தார். எவ்வாறாயினும் நாளை வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள அமைச்சரவையில் மேற்படி தபால்துறை தொழிற்சங்க கூட்டமைப்பின் கோரிக்கைக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்க முடியுமென தபால்துறை அமைச்சர் ஏ.எச்.எம்.ஹலீம் தெரிவித்துள்ளார்.

Thu, 07/18/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை