சவூதி இசை நிகழ்ச்சியில் பங்கேற்கும் கவர்ச்சி பாடகி

பிரபல அமெரிக்க பாடகி நிக்கி மினாஜ் சவூதி அரேபியாவில் இசை விழா ஒன்றில் பங்கேற்கப் போவதாக அறிவித்துள்ளார். எனினும் கவர்ச்சியான ஆடையில் எப்போதும் தோன்று அந்தப் பாடகி ஆபாசமான பாடல்களை பாடும் நிலையில் தீவிர பழமைவாத சவூதியில் அவர் எவ்வாறு தோன்றப்போகிறார் என்று சமூக ஊடகங்களில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளன.

வரும் ஜூலை 18 ஆம் திகதி ஜித்தா நகரில் நடைபெறவிருக்கும் இசை விழாவிலேயே அவர் பங்கேற்கவுள்ளார்.

சவூதி தனது கடும்போக்கு நிலைப்பாட்டில் இருந்து விலகி வருவதை இந்த இசைவிழா காட்டுவாத உள்ளது.

நிக்கி மினாஜ் தனது அறிவிப்பை கடந்த புதனன்று ட்விட்டரில் வெளியிட்டதை அடுத்து அது சமூக ஊடகத்தில் வேகமாக பரவியுள்ளது. சவூதி அரேபியர் இதற்கு முன்னர் நிக்கி மினாஜ் பற்றி கூகுலில் தேடியிருக்க வாய்ப்பு இல்லை என்று ஒருவர் ட்விட்டரில் பதிலளித்துள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்தை பன்முகப்படுத்தும் சவூதி முடிக்குரிய இளவரசர் முஹமது பின் சல்மானின் நோக்கங்களில் ஒன்றாகவே அந்நாட்டு பொழுதுபோக்குத் துறையில் இருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Fri, 07/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை