1994 ஹசீனா கொலை வழக்கு: 9 பேருக்கு மரண தண்டனை

1994ஆம் ஆண்டு பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவை கொலை செய்ய முயன்ற வழக்கில் 9 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷின் தற்போதைய பிரதமராக இருக்கும் ஷேக் ஹசீனா, 1994ஆம் ஆண்டு பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது பிரசாரத்திற்காக டாக்காவில் இருந்து பாப்னா மாவட்டத்துக்கு ரயிலில் சென்றார்.

ரயில் பாப்னாவை சென்றடைந்த போது அப்போதைய ஆளுங்கட்சியான பங்களாதேஷ் தேசிய கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சி தொண்டர்கள் ஷேக் ஹசீனா இருந்த ரயில் பெட்டி மீது குண்டுகளை வீசி கொலை முயற்சியில் ஈடுபட்டனர். இதில் ஷேக் ஹசீனா அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

இது தொடர்பான வழக்கு பாப்னா நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த புதன்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் ஷேக் ஹசீனா மீது தாக்குதல் நடத்திய 9 பேருக்கு மரண தண்டணையும் 25 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. மேலும் 13 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

Fri, 07/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை