ஆப்கானை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்த பாக்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக கடைசி ஓவர் வரை போராடிய பாகிஸ்தான் அணி பெற்ற திரில் வெற்றி மூலம் அந்த அணி உலகக் கிண்ண அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டுள்ளது.

228 ஓட்ட வெற்றி இலக்கை நோக்கி பதிலெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 83 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் 156 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளையும் இழந்து தடுமாற்றம் கண்டது. 36 பந்துகளுக்கு 48 ஓட்டங்களை பெற வேண்டி இருந்தபோது பாக். அணியின் வெற்றி வாய்ப்பு கைநழுவிக்கொண்டிருந்தது.

ஆப்கான் அணித்தலைவர் குல்புதீன் நாயிப் வீசிய 46 ஆவது ஓவரில் 18 ஓட்டங்களை வீளாசியதன் மூலம் பாகிஸ்தான் அணி ஆட்டத்தை தன்வசமாக்கியது.

வெற்றிக்கு 22 ஓட்டங்கள் தேவைப்பட்டபோது ஷதாப் கான் ரன் அவுட் ஆனபோதும் அடுத்து வந்த வஹாப் ரியாஸ் சிக்ஸர் விளாசி பாகிஸ்தான் அணியின் வெற்றியை கைகூடச் செய்தார்.

முன்னதாக துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி முக்கிய இடைவெளிகளில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதனால் அந்த அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 227 ஓட்டங்களையே பெற்றது. பந்துவீச்சில் ஷஹீன் 4 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

இதன்படி இதுவரை எந்த வெற்றியும் பெறாத ஆப்கானிஸ்தான் தனது கடைசி போட்டியில் வரும் வியாழக்கிழமை மேற்கிந்திய தீவுகளை எதிர்கொள்ளவுள்ளது.

மறுபுறம் தற்போது 9 புள்ளிகளுடன் உள்ள பாகிஸ்தான் தனது கடைசி போட்டியில் வரும் வெள்ளிக்கிழமை பங்களாதேஷை எதிர்கொள்ளவுள்ளது. அந்தப் போட்டிய இரு அணிகளுக்கும் வாழ்வா சாவா ஆட்டமா மாறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

Mon, 07/01/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை