ஆஸி. இடம் தோற்ற நியூசிலாந்து அரையிறுதி வாய்ப்புக்கு காத்திருப்பு

அவுஸ்திரேலியாவுடனான உலகக் கிண்ண போட்டியில் நியூசிலாந்து அணி 86 ஓட்டங்களால் தோல்வியை சந்தித்த நிலையில் அந்த அணி அரையிறுதி வாய்ப்புக்காக தொடர்ந்து காத்திருக்க வேண்டி ஏற்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை லண்டன் லோட்ஸில் நடைபெற்ற போட்டியில் 244 ஓட்ட வெற்றி இலக்கை துரத்திய நியூசிலாந்து அணி 157 ஓட்டங்களுக்கே சுருண்டது. முன்னதாக டிரென்ட் போல்ட்டின் ஹட்ரிக் விக்கெட் மூலம் அவுஸ்திரேலிய அணியை 243 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்த நியூசிலாந்தினால் முடிந்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 107 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில் உஸ்மான் குவாஜா (88) மற்றும் அலெக்ஸ் கரி (71) அந்த அணியை கரைசேர்த்தனர்.

பதிலெடுத்தாட களமிறங்கிய நியூசிலாந்து அணி இணைப்பாட்டம் ஒன்றை பெற தடுமாறியது. அபாரமாக பந்துவீசிய மிச்சல் ஸ்டார்க் 26 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் இம்முறை உலகக் கிண்ணத்தில் அவர் பெற்ற மொத்த விக்கெட்டுகளின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்தது.

இங்கிலாந்துக்கு எதிராக கடந்த செவ்வாய்க்கிழமை பெற்ற வெற்றியின் மூலம் உலகக் கிண்ண அரையிறுதிக்கு ஏற்கனவே முன்னேறி இருக்கும் அவுஸ்திரேலியா இந்த வெற்றியின் மூலம் தனது வெற்றியை தொடர்ந்து வருகிறது.

மறுபுறம் முதல் ஆறு போட்டிகளில் தோல்வியுறாத அணியாக இருந்த நிறுசிலாந்து தொடர்ச்சியான இரண்டாவது தோல்வியை சந்தித்த நிலையில் இன்னும் தனது அறையிறுதி வாய்ப்பை உறுதி செய்யவில்லை.

வரும் புதன்கிழமை செஸ்டர் லேயில் நியூசிலாந்து தனது இறுதி லீக் போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொள்ளவுள்ளது. இந்தப் போட்டி இரு அணிகளுக்கும் தீர்க்கமாக அமையவுள்ளது.

Mon, 07/01/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை