ரஷ்ய உளவு விமானத்தின் மீது தென்கொரியா எச்சரிக்கை வேட்டு

தென் கொரிய வான் பகுதிக்குள் நுழைந்த ரஷ்ய உளவு விமானம் ஒன்றின் மீது தமது போர் விமானங்கள் நூற்றுக்கும் அதிகமான எச்சரிக்கை வேட்டுகளை செலுத்தியதாக தென் கொரியா அறிவித்துள்ளது.

தென் கொரியாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஆனால் ஜப்பானும் உரிமை கோரும் டொக்டோ அல்லது டக்சிமா தீவுகளுக்கு மேலால் இந்த விமானம் இரு முறை அத்துமீற நுழைந்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கு பதில் நடவடிக்கையாக போர் விமானங்கள் 360 தடவைகள் எச்சரிக்கை வேட்டுகளை செலுத்தியதாக தென் கொரிய பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

தென் கொரிய வான் பகுதிக்குள் அத்துமீற நுழைந்ததாகக் கூறப்படுவதை ரஷ்யா மறுத்துள்ளது. பொதுவான நீர்ப்பரப்புக்கு மேலால் இரு குண்டு வீசும் விமானங்கள் திட்டமிட்ட பயிற்சியில் ஈடுபட்டதாக குறிப்பிட்ட ரஷ்யா, தென் கொரிய போர் விமானங்கள் எச்சரிக்கை வேட்டுகள் செலுத்தியதாக கூறுவதையும் நிராகரித்துள்ளது.

ரஷ்யா மற்றும் தென் கொரியாவுக்கு இடையே இவ்வாறான சம்பவம் ஒன்று நிகழ்வது இது முதல் முறையாகும்.

மூன்று ரஷ்ய மற்றும் சீன இராணுவம் விமானங்களில் ஒன்றே நேற்றுக் காலை கொரிய வான் பாதுகாப்பு அடையாள வலயத்திற்குள் அத்துமீறி தென் கொரிய இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

இந்த வலயத்திற்குள் நுழைவதற்கு முன் வெளிநாட்டு விமானங்கள் தம்மை அடையளப்படுத்த வேண்டும்.

எனினும் ரஷ்ய மற்றும் சீன குண்டு வீசும் விமானங்கள் அண்மைய ஆண்டுகளில் இந்த வலயத்திற்குள் இருந்து நின்று நுழைகின்றன.

எவ்வாறாயினும் ரஷ்யாவின் ஏ–50 உளவு விமானம் மேலும் தென் கொரிய வான் பகுதிக்குள் நுழைந்ததாக தென் கொரியா குறிப்பிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த விமானத்தை இடைமறிப்பதற்காக எப் –15 மற்றும் எப் –16 போர் விமானங்களை தென் கொரியா அனுப்பியுள்ளது.

சீனா மற்றும் ரஷ்யாவின் வான்வழி மீறல்கள் குறித்து தென் கொரிய அரசாங்கம் உத்தியோகபூர்வ புகார்களை அளிக்கும் என்றும் தென் கொரிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அத்துமீறல் குறித்து ரஷ்யா அல்லது சீன அதிகாரிகளிடமிருந்து உடனடியாக எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

Wed, 07/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை