ஓய்வூதிய கொடுப்பனவு பிரச்சினைகளுக்கு செப்டெம்பர் மாதம் தீர்வு

ஓய்வூதிய கொடுப்பனவு பிரச்சினைகளுக்கு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என்றும் அது தொடர்பில் சகல மாவட்டச் செயலாளர்களுக்கும் பணிப்புரைகளை வழங்கியுள்ளதாகவும் பொதுநிர்வாக மாகாண சபைகள் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

நாட்டில் 6 இலட்சத்து முப்பதாயிரம் பேர் ஓய்வூதியம் பெறும் நிலையில் அவற்றில் ஐந்து இலட்சம் பேரினது ஓய்வூதியம் தொடர்பில் பிரச்சினைகள் நிலவுவதாகவும் அதனை தீர்ப்பதற்கு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். இது தொடர்பில் வரவு, செலவு திட்டத்தில் யோசனைகள் முன்வைக்கப்பட்டு அரசாங்கம் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதெனவும் இந்த பிரச்சினைக்கு விரைவான தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

ஓய்வூதிய கொடுப்பனவு பிரதேச செயலகங்கள் ஊடாகவே வழங்கப்பட்டு வருகின்றன. அதற்கிணங்க மாவட்ட செயலாளர்களுக்கு இதில் பெரும் பங்களிப்பு உள்ளது. அதனால் மாவட்ட செயலாளர்களுக்கு உரிய ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Thu, 07/18/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை