சிறந்த வேட்பாளர் ஒருவரை ஐ.தே.கட்சி களமிறக்கும்

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட

தகுதியான அபேட்சகர்கள் கட்சிக்குள் ஏராளம்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐ.தே.கவில் போட்டியிடுவதற்கு தகுதியான அபேட்சகர்கள் ஏராளமானோர் இருப்பதாக அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

வீரகெட்டிய, கொந்தகலை ரஜ மகா விகாரையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புத்தர் சிலைக்கு மின்சார ஒளியேற்றும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (16) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இங்குதொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர்,

எம்மிடமுள்ள மிகவும் தகுதியான ஒருவரை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் களமிறக்குவோம். தற்பொழுது போட்டியிடுவதற்கு துடிக்கும் ஒருசிலருக்கு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட எவ்வித தகுதிகளும் இல்லை. ஜனாதிபதிக்கு எதிராகக் கொண்டு வருவதற்கு முயற்சிக்கும் நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாக கட்சியில் எவ்வித தீர்மானங்களும் மேற்கொள்ளப்படவில்லை.

எமது கட்சிக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்கவிற்கும் இடையில் இதுவரை எவ்விததொடர்புகளும் இல்லை. இவர் எமது கட்சிக்குள் பிரச்சினையை எற்படுத்தினார். இது போன்றே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள்ளும் பிரச்சினையை ஏற்படுத்தினார். இவரினால் எமது கட்சிக்கு எவ்வித பலனும் இல்லை. தங்களதுதேர்தல் தொகுதியையாவது வெற்றிகொள்ள முடியாத ஒருவருக்கு எவ்வாறு எமது கட்சிக்கு உதவி செய்ய முடியும்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் வேண்டுகோளிற்கிணங்கவே நான் இந்த விகாரைக்கு மின்சாரத்தைபெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்தேன்.

சர்வதேசம் தொடர்பாக சிறந்த அனுபவமுள்ள இவற்றை சிறந்த முறையில் செயற்படுத்தக் கூடிய ஒருசிறந்த தலைவரை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நாம் அபேட்சகராக நியமிப்போம் எனவும் மேலும் அவர் தெரிவித்தார்.

ஹம்பாந்தோட்டைகுறூப் நிருபர்

Thu, 07/18/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை