பொதுஜன பெரமுனவின் தலைமை மஹிந்தவிடம் கையளிக்கப்படும்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவம் ஓகஸ்ட் 11 ஆம் திகதி நடைபெறவுள்ள கட்சி மாநாட்டின்போது எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்படுமென கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே நேற்று தெரிவித்தார்.

இதேவேளை பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை எதிர்க்கட்சித் தலைவர் இம்மாநாட்டில் அறிவிப்பாரென்றும் அவர் கூறினார்.

ஹேவாஹெட்ட பிரதேசத்திலுள்ள விகாரையொன்றின் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மஹிந்தானந்த அளுத்கமகே எம்.பி இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கூறுகையில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவை அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்வதற்கு பொதுஜன பெரமுன ஏற்கனவே தீர்மானம் மேற்கொண்டுள்ளது. அவர் தனது அமெரிக்க பிரஜாவுரிமையை ரத்துச் செய்துள்ளதனால் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அவருக்கு அதுவொரு தடையாக அமையாது. ஐக்கிய தேசியக் கட்சியை தோற்கடிக்கும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் பலம்மிக்கதொரு அரசியல் கட்சியொன்று உருவாக்கப்படும். இக்கூட்டணியுடன் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க சேர்ந்தால் அது ஆச்சரியப்படுவதற்கில்லை என்றார்.

Tue, 07/30/2019 - 06:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை