இரண்டொரு தினங்களில் பிரச்சினைகளுக்கு தீர்வு

தபால் ஊழியர் பிரச்சினை

தபால் ஊழியர்களின் பிரச்சினைக்கு இரண்டொரு தினங்களில் தீர்வு பெற்றுத் தரப்படுமென தபால் சேவைகள், முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் உறுதியளித்திருக்கின்றார். தபால் ஊழியர்கள் முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்தத்தில் குதித்துள்ள நிலையில் அது தொடர்பில் தபால், தபால் சேவைகள் அமைச்சர் எம். எச். ஏ. ஹலீமிடம் தொடர்புகொண்டு கேட்டபோதே மேற்கண்டவாறு

தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது,

தபால் திணைக்கள ஊழியர்களின் சில பிரச்சினைகள் தொடர்பாக கோரிக்கைகள் முன்வைக் கப்பட்டுள்ளன. அதில் தீர்வுகாண சுற்று நிரூபத்தில் சில திருத்தங்களை கொண்டு வரவேண்டியுள்ளது. அதனை இரண்டொரு தினங்களில் சீரமைத்துத் தருவதாக உறுதியளித்திருக்கின்றோம்.

பெரும்பாலான தொழிற்சங்கங்கள் அதற்கு இணக்கம் தெரிவித்துள்ளன. அவர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளை இடை நிறுத்துவதாக தெரிவித்திருக்கின்றனர். குறிப்பிட்ட இரண்டொரு சங்கங்களின் ஊழியர்கள் வேலை நிறுத்தத்திலீடுபடுகின்றனர். அதன் மூலம் தபால் சேவைகள் பாதிக்கப்படப் போவதில்லை. வழமையான சேவையை வழங்க முடியும் என நம்புகின்றேன்.

எவ்வாறெனினும் அடுத்த இரண்டொரு தினங்களில் இப்பிரச்சினைக்கு உறுதியான தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும். இது தொடர்பில் தொழிற்சங்கங்களிடம் தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.

 

எம். ஏ. எம். நிலாம்

Wed, 07/17/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை