சகிப் அல்-ஹசன் புதிய சாதனை

500 ஓட்டங்களுடன் 10 விக்கெட்டுகள்

பங்களாதேஷ் அணியின் சகலதுறைவீரரான ஷகிப் அல்- ஹசன் உலகக் கிண்ணத்தில் 500 ஓட்டங்களுடன் 10 விக்கெட்டுக்கு மேல் வீழ்த்திய ஒரே வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

உலகக் கிண்ண போட்டியில் பங்களாதேஷ் வீரர் புதிய சாதனை படைத்தார். அவர் இந்தியாவுக்கு எதிராக 66 ஓட்டங்கள் எடுத்தார். இதன் மூலம் 542 ஓட்டங்களை தொட்டார். 11 விக்கெட் வீழ்த்தி உள்ளார்.

உலகக் கிண்ணத்தில் 500 ஓட்டங்களுக்கு மேல் குவித்தும் 10 விக்கெட் டுக்கு மேலும் எடுத்தவர் என்ற சாதனையை சகிப் அல் -ஹசன் படைத்தார். இதற்கு முன்பு நியூசிலாந்தை சேர்ந்த ஸ்கொட் ஸ்டைரிஸ் 2007 உலக கிண்ணத்தில் 449 ஓட்டங்கள் பெற்று 9 விக்கெட் கைப்பற்றியது சாதனையாக இருந்தது. இதை ஷகிப் அல் ஹசன் முறியடித்தார்.

Fri, 07/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை