மாற்றம் செய்ய எவருக்கும் அதிகாரமில்லை

ஷரீஆ சட்டத்தை மாற்ற எவருக்கும் அதிகாரம் கிடையாது. முஸ்லிம் தனியார் விவாக மற்றும் விவாகரத்து சட்டத்தை மாற்ற எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை என முன்னாள் மேல் மாகாண ஆளுநரும் தேசிய ஐக்கிய முன்னணி தலைவருமான அஸாத் சாலி

தெரிவித்தார்.

சரீஆ சட்டத்தை மாற்றுவதற்கு முஸ்லிம் தலைவர்களுக்கு யார் அதிகாரம் வழங்கியது என்று கேள்வி எழுப்பிய அவர்,ஒன்றை விட்டுக் கொடுத்தால் நிறைய விடயங்களில் கைவைத்து மாற்றம் செய்ய முயல்வார்கள் என்றும் கூறினார்.

முஸ்லிம் தனியார் விவாக விவாகரத்து சட்டத்தில் மாற்றங்கள் செய்ய முஸ்லிம் எம்.பிகளிடையே உடன்பாடு காணப்பட்டுள்ளதாகவும் விரைவில் நீதி அமைச்சரிடம் யோசனை கையளிக்கப்பட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.இது பற்றி கருத்து தெரிவித்த அவர்,

சரீஆ சட்டத்தை எவராலும் மாற்ற முடியாது.அதில் எந்த மாற்றவும் செய்ய இடமளிக்க முடியாது.மிலிந்த மொரகொட அமைச்சராக இருந்த ​போது இதனை மாற்ற குழு அமைத்தார்.இரு யோசனைகள் கையளிக்கப்பட்ட நிலையில் எமது சமூகம் இரண்டாக துண்டாடப்பட்டது.இதில் பாயிஸ் முஸ்தபா குழுவின் அறிக்கையையே நாம் ஏற்கிறோம்.

எமது சரீஆ சட்டத்தில் கைவைக்க இடமளித்தால் மேலும் பல விடயங்களை மாற்ற இடமளித்தாகும்.முஸ்லிம் எம்.பிகள் கூறுவது போல திருமண விவாகரத்து சட்டங்களை மாற்ற முடியாது என்றார்.(பா)

Mon, 07/15/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை