கறுப்பின வழக்கறிஞரை இனரீதியில் தாக்கி பேசிய டிரம்ப் மீது கண்டனம்

ஆபிரிக்க அமெரிக்க வழக்கறிஞர் குறித்து டிரம்ப் பதிவிட்ட ட்வீட் ஒன்று இன ரீதியிலாக தாக்குவது என அமெரிக்காவின் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி தெரிவித்துள்ளார்.

ஜனநாயக கட்சியின் பிரதிநிதியான எலிஜா க்யூமிங்க்ஸ் மற்றும் அவரின் மேரிலாண்ட் மாவட்டம் குறித்து டிரம்ப் டிவிட்டரில் மோசமாக பதிவிட்டுள்ளார்.

கறுப்பின மக்களை அதிகமாக கொண்ட க்யூமிங்க்ஸின் பால்டிமோர் மாவட்டத்தை எலிகள் மிகுந்த அழுக்கான ஒரு பகுதி என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க–மெக்ஸிகோ எல்லையில் குடியேறிகளை நடத்தும் விதம் குறித்து விமர்சித்திருந்த க்யூமிங்க்ஸ் பிறரை கொடுமைப்படுத்துபவர் என்றும் டிரம்ப் தெரிவித்திருந்தார்.

அமெரிக்க மக்கள் கணக்கெடுப்புப்படி 50 வீதத்துக்கும் அதிகமான கறுப்பின மக்கள் வாழும் மாவட்டம் குறித்து டிரம்ப் பேசியது இன ரீதியிலான தாக்குதல் என சபாநாயகர் நான்சி பெலோசி தெரிவித்துள்ளார்.

தடுப்பு மையங்களில் குடியேறிகளை நடத்துவது உள்ளிட்ட டிரம்ப் நிர்வாகத்தின் கொள்கைகளை மேற்பார்வையிடும் குழுவின் தலைவராகவும் க்யூமிங்க்ஸ் உள்ளார்.

கடந்த வாரம் தற்காலிக உள்துறை பாதுகாப்பு செயலாளராக இருக்கும் கெவின் மெக் அலீனன் குறித்தும், தடுப்பு மையங்களில் குடியேறிகளின் நிலை குறித்தும் பாராளுமன்றத்தில் கடுமையாக க்யூமிங்க்ஸ் பேசினார்.

மெக் அலீனன் மற்றும் க்யூமிங்கிஸுக்கு இடையே ஏற்பட்ட விவாதத்தில் எல்லை பகுதிகளில் வசதிகள் மேம்பட வேண்டும் என்று தெரிவித்தார் க்யூமிங்க்ஸ்.

“அதன்பின் எல்லை பகுதி சுத்தமாக, மற்றும் திறன்பட நடத்தப்பட்டு வருகிறது. அங்கு வெறும் கூட்டம் மட்டுமே அதிகமாக உள்ளது” என தனது டிவிட்டர் பக்கத்தில் டிரம்ப் பதிவிட்டிருந்தார்.

“இதற்கு முந்தைய ட்வீட்டில் எல்லை பாதுகாப்பு அதிகாரிகளிடம் க்யூமிங்ஸ் கத்திக் கொண்டு இருக்கிறார். ஆனால் அவரின் பால்டிமோர் மாவட்டம் தான் மிகவும் மோசமானது ஆபத்தானது.

மேலும் அவரின் மாவட்டம்தான் அமெரிக்காவில் மிகவும் மோசமான மாவட்டம்.” என அவர் தெரிவித்துள்ளார்.

Mon, 07/29/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை