உலக வெப்பத்தால் வேலைகள் இழப்பு

உலக வெப்பமயமாதல் அதிகரித்து வருவதால் 2030ஆம் ஆண்டிற்குள் 80 மில்லியன் வேலைகள் குறையலாம் என்று ஐ.நா தெரிவித்துள்ளது. இதனால் விவசாயத்துறை அதிகமாகப் பாதிக்கப்படும் என்றும் அது கூறியது.

அதிகரிக்கும் வெப்பத்தால் 2030ஆம் ஆண்டு மொத்த வேலை நேரத்தில் கிட்டத்தட்ட 2.2 வீத இழப்பு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

அதன் தாக்கம் மேற்கு ஆபிரிக்காவிலும் தெற்காசியாவிலும் அதிகமாக இருக்கும் என்றும் சர்வதேச தொழிலாளர் நிறுவனம் குறிப்பிட்டது.

உலக வெப்பமயமாதலால் உலகப் பொருளாதார வளர்ச்சி சுருங்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நூற்றாண்டின் முடிவுக்குள் உலக வெப்ப அதிகரிப்பு 1.5 டிகிரி செல்சியஸ் என்ற வரம்புக்குள் இருக்கும் என்ற அடிப்படையில் அவ்வாறு கணிக்கப்பட்டுள்ளது.

Wed, 07/03/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை